1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் சிறகடிக்க ஆசை முத்துக்கு எங்கேஜ்மென்ட்.. பொண்ணு இந்த நடிகையா..?

Q

சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் வெற்றி வசந்த்தை சின்னத்திரையில் விஜய் சேதுபதி என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இவர் இன்று தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு விரைவில் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்து சொல்லப் போறேன் என்று ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.

சிறகடிக்க ஆசை கொடுத்த மிகப் பெரிய வெற்றியால் தனது வாழ்க்கையில் அடுத்த முடிவை எடுத்துள்ளார். ஆம் வெற்றி வசந்துக்கு கூடிய விரைவில் திருமணம். பொண்ணு வேற யாருமில்லை விஜய் டிவி பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவி சுந்தர் தான். ராஜா ராணி 2 சீரியலில் பார்வதியாக நடித்த வைஷ்ணவி, பின்பு பொன்னி சீரியல் மூலம் லீட் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். வெற்றி வசந்த் வைஷ்ணவி இருவரும் சேர்ந்து பல ஷார்ட் பிலிம்களில் நடித்துள்ளனர்.

வைஷ்ணவியும் விஜய் வசந்த்தும் காதலித்து வருவதாகவும் இந்த வாரத்திற்குள் எங்களுடைய எங்கேஜ்மென்ட் நடைபெறுகிறது, விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்று வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கின்றனர்.

இவர்கள் இருவரும் க்யூட்டான போட்டோ சூட் வீடியோ ஒன்றும் எடுத்து இருக்கின்றனர். இருவரும் வெள்ளை நிறத்தில் இருக்கும் ரீல்ஸ் வீடியோயை பகிர்ந்திருக்கும் நிலையில் இணையத்தில் அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like