சோனமுத்தா... ரூ.27 கோடி போச்சா..! வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

ஐபிஎல் 2025-ல் ரிஷப் பண்ட் சொதப்பியதால் ரசிகர்கள் கிண்டல். தொடர்ந்து 3 போட்டிகளில் சொதப்பியதால் அவரை ட்ரோல் செய்யத் தொடங்கிவிட்டனர்
பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று லக்னோ அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். முதல் ஓவரிலேயே மிட்செல் மார்ஷ் டக் அவுட் ஆனார். பின்னர் நான்காவது ஓவரில் மார்க்ரம் தனது விக்கெட்டை இழந்தார். ஐந்தாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் பண்ட் அடித்த பந்தை யூஜி சஹால் கேட்ச் பிடித்தார். இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள பண்ட் 0, 15 மற்றும் 2 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் சமூக வலைத்தளங்களில் அவரை வைத்து மீம்ஸ்கள் பரவி வருகின்றன.
ரிஷப் பண்ட் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் மற்றும் கேப்டன் ஆவார். அவரை ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 27 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அவர் அதிரடியாக விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், முதல் 3 போட்டிகளிலும் அவர் ஏமாற்றம் அளித்துள்ளார். கேப்டனாக அவர் எடுத்த சில முடிவுகளும் தவறாக இருந்தன. டெல்லிக்கு எதிரான போட்டியில் ஒரு ஸ்டம்பிங்கை தவறவிட்டார். அதனால் அணி தோல்வியடைந்தது.