1. Home
  2. தமிழ்நாடு

ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் சாதனை !!

ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் சாதனை !!


பெரியகுளம் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஜீவித் குமார் நீட் தேர்வில் இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பெரியகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஜீவித்குமார் நீட் தேர்வில் 720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கொரோனா பரவல் இருப்பினும், மத்திய அரசின் வழிகாட்டுதல் படியும் கட்டுப்பாடுகளுடனும் கடந்த 13-ம் தேதி நாடு முழுவதும் 3 ஆயிரத்து 862 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் நீட் தேர்வை ஆர்வமுடன் எழுதினர். ஆனால், கொரோனா பரவலுக்கு பயந்து சிலர் தேர்வு எழுதமுடியாமல் தவித்தனர்.இதனால், தேர்வு எழுத முடியாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த 14-ம் தேதி நீட் தேர்வு நடத்த உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியது. அவ்வாறு நடத்தப்பட்ட தேர்வுகள் முடிவுகளை இன்று மாலை வெளியாகின.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 48.57 % சதவீதமாக இருந்த நீட் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 57.44% ஆக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் 8 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

ஆடு மேய்த்துவரும் நாராயணசாமி என்பவரின் மகன் ஜீவித்குமார் நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளது அறிந்து அனைவரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like