மிக்ஜாம் புயல் காரணமாக மேலும் சில ரயில்கள் ரத்து…டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு..!
மிக்ஜாம்’ புயல் எதிரொலியாக, டிச.04, 06 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது; நேர்முகத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அதேபோல், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகவும், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.03) விடுமுறை அளித்து, அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை காரணமாக, சென்னையில் இருந்து புவனேஸ்வர் செல்லும் இரண்டு ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், செகந்திராபாத்- ராய்ப்பூர் ரயில், சென்னை சென்ட்ரல்- டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை சென்ட்ரல்- புவனேஸ்வர் வாராந்திர சிறப்பு ரயில் ஆகிய ரயில் சேவைகளை இரு மார்க்கத்திலும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.