நாளை தோன்றும் சூரிய கிரகணம்.. எச்சரிக்கை விஞ்ஞானிகள் விடுக்கும் !

நெருப்பு வளையம் என்று பிரபலமாக அறியப்படும் சூரியகிரகணம் என்ற அறிய நிகழ்வு நாளை விண்ணில் நிகழ்கிறது.
சூரிய கிரகணத்தின் போது நிலவின் தோற்ற அளவு சூரியனை விட கொஞ்சம் சிறியதாக இருக்கும் போது சூரியனின் மையப்பகுதி முழுதையும் அது மறைக்கும் போது சூரியனின் மேல் பகுதி நெருப்பு வளையம் போல் தோன்றும். ஒரு சிறிய நேரமே இந்தக் காட்சி இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மத்திய ஆப்ரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் சூரிய கிரகணம் தெரியும். இந்தியாவில் ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் முழு சூரிய கிரகணம் தெரியும். மற்ற பகுதிகளில் பாதி சூரிய கிரகணம் தெரியும். சென்னையில் 34 சதவீதம் தெரியும்.
அடுத்த சூரிய கிரகணம் 2020 டிச., 14ல் தோன்றும். வெறும் கண்களால் பார்க்கக்கூடாது.இந்த ஆண்டின் முதல் சூரியகிரகணம் கோடைக்கால கதிர்மண்டலத் திருப்புமுகத்தில் ஏற்படுகிறது, இது புவி வடக்கு அரைகோளத்தில் நீண்ட பகல் நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும்போது பூமியின் மேற்பரப்பில் நிழல் விழும். சூரியனை நிலவு ஒரு குறிப்பிட்ட மணித்துளிகள் முழுவதும் மறைக்கும். இது சில இடங்களில் முழு சூரியகிரகணமாகவும் சில இடங்களில் பகுதி கிரகணமாகவும் தெரியும்.
இதுகுறித்து கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் உள்ள வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் எபினேசர் மற்றும் குமரவேல் ஆகியோர் கூறியதாவது:-
நாளை நடைபெற உள்ள சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம். முழு சூரிய கிரகணம் இல்லை. இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் நாளை காலை 10.22 மணிக்கு தொடங்கி மதியம் 1.41 மணிக்கு முடிவு பெறும். இதில் நண்பகல் 11.59 மணிக்கு முழுமையான நிலை ஏற்படும்.
இருப்பினும் தமிழகத்தில் 34 சதவீதம் மட்டுமே சூரிய கிரகண நிகழ்வை காண முடியும். கொடைக்கானல் பகுதியில் நடைபெறும் சூரிய கிரகணத்தை www.iiap.res.in என்ற இணையதளங்களில் பொதுமக்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று சூரிய கிரகண நிகழ்வை பார்க்கலாம். சூரிய கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்க கூடாது. பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பாதுகாப்பான கண்ணாடிகளை அணிந்தபடியே அதனை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
newstm.in