1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஒரே நாளில் சூரிய கிரகணம் - மகாளய அமாவாசை..!

1

அமாவாசைகளில், ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதம் வருகிற மகாளய அமாவாசை என 3 அமாவாசைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டு புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை அக்டோபர் 2-ம் தேதி புதன்கிழமை 2024-ல் வருகிறது. இந்த மகாளய அமாவாசையின் சிறப்பு என்னவென்றால், இதே நாளில் சூரிய கிரகணமும் சேர்ந்து வருகிறது. இதுதான், இந்த மகாளய அமாவாசை நாளின் சிறப்பாகும். இந்த மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். அதனால், இந்த நாளில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது நல்லது. 

மகாளய பட்சத்தின் நிறைவு நாளாக வருவது மகாளய அமாவாசையில், மகாளய பட்சத்தின் 15 நாட்களும் முன்னோர்களை வழிபட முடியாதவர்கள், வழிபட தவறியவர்களும் இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டால் ஆண்டு முழுவதும் முன்னோர்களை வழிபட்ட பலன் கிடைக்கும், 21 தலைமுறையினரின் பாவங்கள் தீரும் என சொல்லப்படுகிறது. அதனால், மகாளய அமாவாசை எப்போது தொடங்குகிறது, எப்போது திதி கொடுக்க வேண்டும் என்ற விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த ஆண்டு மகாளய அமாவாசை நாளில், அக்டோபர் 1-ம் தேதி இரவு 10.35 மணி துவங்கி, அக்டோபர் 3-ம் தேதி அதிகாலை 12.34 வரை அமாவாசை திதி உள்ளது. அதனால், இது சர்வ அமாவாசையாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், அக்டோபர் 2-ம் தேதி இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. 

சூரிய கிரகணம் அக்டோபர் 2-ம் தேதி இரவு 9.13 மணிக்கு தொடங்கி, அக்டோபர் 3-ம் தேதி காலை 3.17 வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் கடைசி 7 நிமிடங்கள் 25 விநாடிகள் உச்சத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது. 

இந்த சூரிய கிரகணம் நிகழும்போது, இந்தியாவில் இரவு நேர என்பதால், இந்தியாவில் எந்த பகுதியிலும் சூரிய கிரகணம் தெரியாது. அதனால், இந்த சூரிய கிரகணத்தால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. பிறகு, இந்த சூரிய கிரகணம் எந்த பகுதியில்தான் தெரியும் என்று கேட்டால், தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே இந்த சூரிய கிரகணத்தைக் காண முடியும் என அறிவியலாளர்கள் கூறி உள்ளனர். அதனால், மகாளய அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவதற்கும், திதி கொடுப்பதற்கும் எந்த தடையும் இல்லை.


​அதே நேரத்தில், ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கப்படி, அக்டோபர் 2-ம் தேதி மகாளய அமாவாசை நாளில் சூரியன், சந்திரன், கேது, புதன் ஆகிய கிரகங்களும் கன்னி ராசியில் ஒன்று சேர்வதாக அமைந்துள்ளது. சந்திரன், கன்னி ராசியில் அஸ்தம் நட்சத்திரத்தில் நுழைவதாக அமைந்துள்ளதால் கன்னி ராசிக்காரர்களுக்கு உடல்நிலையில் சிறிய பாதிப்புளை ஏற்படுத்தும். அதனால் கன்னி ராசிக்காரர்கள் மட்டும் மகாளய அமாவாசை அன்று, அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று சூரை தேங்காய் உடைத்து வழிபடுங்கள். இல்லையென்றால், மட்டை தேங்காய், அரிசி ஆகியவற்றை கோவில் அர்ச்சகர் அல்லது வேறு யாருக்காவது தானமாக அளிப்பது நல்லது.

மகாளய அமாவாசை அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. அதனால், அன்னதானம் செய்யுங்கள், அதோடு, அரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், தட்சணை, வஸ்திரம் ஆகிய 5 பொருட்களை அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் தானமாக வழங்கினால் பலன் கிடைக்கும். இந்த நாளில் திதி கொடுத்து தானம் செய்தால், முன்னோர்களின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.

இந்த சூரிய கிரகணம் நிகழும்போது இந்தியாவில் இரவு நேரம் என்பதால், அதனால், எந்த பாதிப்பும் இல்லை. சூரிய கிரகணம் என்பதால், மகாளய அமைவாசை நாளில் வழிபடலாமா, திதி கொடுக்கலாமா, தர்ப்பணம் செய்யலாமா என்ற சந்தேகம் வேண்டாம். இந்த மகாளய அமாவாசை நாளில், அன்னதானம் உள்ளிட்ட எல்லா தானங்களையும் செய்யலாம். முன்னோர்களுக்கு தாராளமாக தர்ப்பணம் கொடுக்கலாம்.

Trending News

Latest News

You May Like