சமந்தா பற்றிச் சோபிதா போட்ட பதிவு வைரல்!
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆனவர் சோபிதா துலிபாலா. அப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி என்கிற கேரக்டரில் நடித்த அவர், தற்போது பாலிவுட், ஹாலிவுட் எனச் செம்ம பிசியாக நடித்து வருகிறார். இவரும் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் காதலித்து வருவதாகக் கடந்த சில ஆண்டுகளாகச் செய்திகள் உலா வந்த நிலையில், அவர்களே கடந்த வாரம் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யாவுக்கு, கடந்த வாரம் சோபிதா உடன் திருமணம் நிச்சயம் ஆனது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். சோபிதா – நாக சைதன்யா ஜோடியின் திருமண நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இருவரின் காதல் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்தாலும் மறுபுறம் சோபிதா போட்ட பழைய இன்ஸ்டா பதிவுகள் ஒவ்வொன்றாக வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் தன் பெற்றோர் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் அப்பா மற்றும் அம்மா தான் எனக்குப் பெற்றோராக வர வேண்டும் என்பது எனது விருப்பம். மற்றதெல்லாம் எனக்குத் தேவையில்லை. என் தங்கை சமந்தா நாயாகவோ அல்லது வேறேதுவுமாகப் பிறக்கட்டும். அது பரவாயில்லை” எனப் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் சமந்தா நாய் ஆகப் பிறக்கட்டும்னு சொல்லிவிட்டாரேயெனக் கூறி வைரலாக்கி வருகின்றனர்.
சோபிதாவுக்கு சமந்தா என்கிற சகோதரி இருக்கிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. தன் சகோதரிபற்றிச் சோபிதா துலிபாலா போட்ட இந்தப் பதிவு தற்போது இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றது. அதே வேளையில் நடிகை சமந்தா – நடிகர் நாக சைதன்யாவை பிரிந்ததற்கு சோபிதா தான் காரணம் என்றும் டோலிவுட் வட்டாரத்தில் ஒரு புதிய தகவல் வெளியாகிப் புயலை கிளப்பி இருக்கிறது. சமந்தாவை பிரியும் முன்னரே சோபிதா உடன் நாக சைதன்யா தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.