1. Home
  2. தமிழ்நாடு

ஒரே நாளில் இவ்வளவு உயர்வா..?மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை..!

Q

ஒரு பவுன் தங்கம் விலை கடந்த ஜனவரி 22-ம் தேதி ரூ.60,200, கடந்த 24-ம் தேதி ரூ.60,440, கடந்த 29-ம் தேதி ரூ.60,760, கடந்த 30-ம் தேதி ரூ.60,880 என தொடர்ந்து அதிகரித்து, புதிய உச்சங்களை தொட்டது.
31-ம் தேதி கிராமுக்கு ரூ.120 என பவுனுக்கு ரூ.960 அதிகரித்தது. இதனால், ஒரு கிராம் ரூ.7,730-க்கும், ஒரு பவுன் ரூ.61,840-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து மத்திய பட்ஜெட் எதிரொலியாக பிப்.1 அன்று தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.60 என பவுனுக்கு ரூ.480 அதிகரித்தது. இதனால், ஒரு கிராம் ரூ.7,790-க்கும், ஒரு பவுன் ரூ.62,320-க்கும் விற்கப்பட்டது.
இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று சற்றே குறைந்தது. ஆனால் இன்று மீண்டும் உயர்ந்து மற்றொரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,810-க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.62,480-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.106-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.1,06,000 ஆக விற்பனையாகிறது.

Trending News

Latest News

You May Like