பல கெட்ட வார்த்தைகள்.. GOAT படத்துக்கு U/A
வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜயின் 68-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் வெளியாக உள்ள இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு விதமான ரோலில் நடித்துள்ளார். இதில் அப்பா கதாபாத்திரத்திற்கு காந்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. அந்த டிரெய்லரில் இளம் வயது விஜய், வயதான தோற்றத்தில் விஜய் என டிரெய்லரில் பல சர்ப்ரைஸ்கள் இருந்தன.
கோட் படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், தி கோட் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடக்குமா இல்லையா என்பது குறித்து எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை. ஆனால், டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போது செய்தியாளர்கள், இசைவெளியீட்டு விழா குறித்து கேட்ட போது, ஏஐ வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. மேலும், விஜய்யிடம் இதுகுறித்து பேசி இருக்கிறோம் அவர் தேதி கொடுத்த பிறகு இசைவெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று வெங்கட்பிரபு கூறினார்.
#GOAT — U/A with runtime 2 hours 59 mins. pic.twitter.com/rjv74XBtIh
— LetsCinema (@letscinema) August 23, 2024
இந்நிலையில், தி கோட் படத்திற்கு சென்ஸார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி 59 நிமிடமாக உள்ளது என தெரியவந்துள்ளது.மேலும் படத்தில் இருந்த பல கெட்ட வார்த்தைகளும் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
படத்தில் சில ஆபாச வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தேசத்தந்தை என்ற வார்த்தையும் மியூட் செய்யப்பட்டுள்ளது. படத்தில் விஜயின் கதாபாத்திர பெயர் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், படத்தின் இறுதி 3 நிமிடங்கள் BTS (Between the shots) எனப்படும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட நகைச்சுவையான தருணங்கள் திரையிடப்படுகிறது. முன்னதாக வெளியான அனைத்து வெங்கட் பிரபு படங்களிலும் இவ்வாறு BTS காட்சிகள் இடம் பெற்றிருக்கும். சமீப காலமாக ஆடியன்ஸ் மத்தியில் இரண்டரை மணி நேரம் மேலாக ஓடும் படங்களுக்கே திரைக்கதை வேகமாக இல்லை என விமர்சனம் எழுகிறது. அந்த வகையில், கோட் படம் ஓடும் நேரம் 2 மணி 59 நிமிடமாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளில் கோட் படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது.