இதுவரை என்னோட வார்டு மட்டும் தான்... இனிமே கோவை முழுக்க... புதிய மேயர் பேட்டி!
கோவை மாநகராட்சியின் மேயராக தி.மு.க 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அமைச்சர்கள் நேரு, முத்துசாமி, கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ரங்கநாயகி செய்தியாளர்களிடம் கூறியதாவது:என்னை மேயராக்கிய தி.மு.கவுக்காக தொடர்ந்து அயராது பாடுபடுவேன். கோவையின் தேவைகள் என்னென்ன என்பதை கேட்டறிந்து, உடனடியாக அவற்றை நிவர்த்தி செய்வேன்.
தற்பொழுது வரை என்னுடைய வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குறைகளை மட்டும் கேட்டிருந்த நான், இனி கோவை மாநகர் முழுவதும் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை கேட்டு தெரிந்து, அவற்றை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்." என்றார்.