கண்ணீர் மல்க தவெகவில் இணைந்த ஸ்னோலின் தாயார்!
தவெக தலைவர் விஜய் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பகலில் சென்றால் ரசிகர்கள் கூடக்கூடும் என்பதால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகையும் வழங்கினார். இதில், ஸ்னோலின் குடும்பமும் அடங்கும்.
இந்நிலையில் ஸ்னோலினின் தாயார், இன்று விஜய்யின் தவெக கட்சியில் இணைந்தார். தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னிலையில் அவர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.