`பாம்புபிடி’ மன்னன் வாவா சுரேஷுக்கு லைசன்ஸ்..!

வீடுகளில் பாம்புகளைக் கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். இல்லையேல் பாம்புகளைப் பிடிக்கவே செயல்படும் சூழலியல் சார்ந்த தன்னார்வலர்களை அழைக்கின்றனர்.அப்படித்தான் கேரள மக்கள் எப்போதும் வாவா சுரேஷை அழைக்கின்றனர்.
பொதுமக்கள் எந்த நேரத்திலும் எந்தச் சூழலிலும் அழைத்தாலும் பாம்புகளைப் பிடிக்கும் வா வா சுரேஷ்.சிறிய பாம்புகள் முதல் கரு நாகப்பாம்பு உள்ளிட்ட அரியவகை பாம்புகளை பிடிப்பதோடு மட்டுமல்லாது பாம்பு பிடிப்பது தொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு வருவார்.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்துள்ள வாவா சுரேஷுக்கு லைசன்ஸ் வழங்க வனத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
லைசன்ஸ் இன்றி பாம்புகள் பிடிப்போருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது