வீடு திரும்பினார் பாம்பு பிடி வீரர் காஜா மைதீன்..!
கடந்த நவம்பர் மாதத்தில் சிறுமுகை - அன்னூர் சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியில், பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டார்.கோவை மாவட்டம் சிறுமுகை அருகே திம்மராயம்பாளையத்தை சேர்ந்தவர் காஜா மைதீன், 43. பாம்பு பிடி வீரர்.
மினி லாரியில், பாம்பு பிடிக்கும் போது, நல்ல பாம்பு அவரை இருமுறை கடித்தது. இதில் அவரது உடம்பில் விஷம் மெல்ல ஏற தொடங்கியது.பாம்பு பிடி வீரர் காஜா மைதீனை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்., இரண்டு கைகளிலும் நாகப் பாம்பு கொத்தியிருந்த நிலையில் கடந்த 20 நாட்களாக கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நாகப் பாம்பு தாக்கியதால் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிய பாம்பு பிடி வீரர் காஜா மைதீன் நலம்பெற்று வீடு திரும்பினார்.