1. Home
  2. தமிழ்நாடு

சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி தந்த ஸ்மிருதி மந்தனா..!

1

மகளிர் ஆசியக் கோப்பை டி20 தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இப்போட்டியை காண  இலங்கையின் மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் தனது தாயுடன் வந்திருந்தார்.அதிஷா ஹேரத் என்ற குறித்த சிறுமியை சந்தித்த இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana), அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு செல்போனை பரிசாக வழங்கினார். 

பின்னர் பேசிய சிறுமியின் தாய், ''எனது மகள் போட்டிக்கு செல்ல விரும்பியதால் நாங்கள் எதிர்பாராத விதமாக போட்டியை பார்க்க வந்தோம். இந்திய அணியில் இருந்து மந்தனா மேடத்தை சந்தித்தோம். என் மகள் அவரிடம் இருந்து ஒரு செல்போனைப் பெற்றாள். இது எதிர்பாராதது, அவரிடம் இருந்து பரிசைப் பெற்ற என் மகள் அதிர்ஷ்டசாலி. எனவே போட்டிகளைப் பார்க்க வாருங்கள்'' என கூறினார். 

மேலும்,  இலங்கை கிரிக்கெட் பகிர்ந்த வீடியோவுடன், 'அதிஷா ஹேரத்தின் கிரிக்கெட் மீதான காதல் அனைத்து சவால்களையும் மீறி அவரை மைதானத்திற்கு கொண்டு வந்தது' என குறிப்பிட்டுள்ளது.   


 

Trending News

Latest News

You May Like