1. Home
  2. தமிழ்நாடு

1,06,075 வாக்கு வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி தோல்வி..!

1

2024 லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி ஆகிய நேரு-இந்திரா குடும்பத்தின் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமலேயே இழுத்தடித்து வந்தது. இதனை பாஜக அரசியல் ஆதாயத்துக்காக கையில் எடுத்தது. இங்கே பலரின் பெயர்கள் சுற்றி வந்தன. ஏன் ராகுல் கூட மீண்டும் அமேதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. கடைசியில் ஆனால் அதிரடியாக ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியும் அமேதியில் கேஎல் ஷர்மாவும் களமிறங்கி உள்ளனர். ராகுல் காந்தியின் இந்த தடாலடி வியூகமானது பாஜகவினரை ‘வாயடைக்க’ வைத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். முக்கியமாக ஸ்மிர்தி இராணியை நான் எதிர்க்க வேண்டியது இல்லை.. கட்சி தொண்டர் கே எல் ஷர்மா போதும். அவரே உங்களை வீழ்த்துவார். நான் உங்களுக்கு போட்டியில்லை.. மோடிக்குத்தான் போட்டி என்று ராகுல் காந்தி ஸ்மிருதி இரானியிடம் சொல்லாமல் சொல்லி கே எல் ஷர்மாவை களமிறங்கினார். ராகுல் போட்டியிடுவார். அதை வைத்து நான் பெரிய ஆள் என்று சொல்ல ஸ்மிருதி இரானி நினைத்தார். ஆனால் நேரு குடும்பத்தின் மிக நெருக்கமான விசுவாசமான கே.எல்.ஷர்மாவை களமிறக்கியிருக்கிறார் ராகுல் காந்தி.

இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி படுதோல்வியை அடைந்து இருக்கிறார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஸோரி லால் 368487 வாக்குகள் பெற்றுள்ளார். அமேதி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி 261975 வாக்குகள் பெற்று 106075 வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார் ஸ்மிருதி இரானி.

Trending News

Latest News

You May Like