சிறு சிறு கட்சிகள் புதிதாக வரும். அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை - அமைச்சர் துரைமுருகன்.

சென்னை சைதாப்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,
”தினமும் வரும் புது புது கட்சிகள் திருவிழாவில் விடும் வானவேடிக்கை போல் காணாமல் போய்விடும். அவ்வளவுதான் அது.
திமுக என்பது கட்சி. அவர்கள் வெறும் கூட்டம் தான். இங்கு இருப்பவர்கள் கட்சிக்காக உயிரைக் கொடுப்பார்கள். அங்கு முடியை கூட கொடுக்க மாட்டார்கள். அதனால் அவர்கள் பற்றியெல்லாம் நான் பேசுவது கிடையாது. பேச வேண்டிய அவசியம் கிடையாது. தேர்தல் வர வர அந்த சின்ன சின்ன கட்சிகள் கரைந்து போய்விடும்.
நம்மை எதிர்க்கும் கட்சி அதிமுகவாகத்தான் இருக்கும். அவர்களுக்கும் முடியவில்லை என்றால் ஏழு எட்டு கட்டு போட்டு வருவார்கள். எத்தனை கட்டுப்போட்டு வந்தாலும் திமுக எதிர்க்கும்” எனத் தெரிவித்தார்.
மேலும் “ஆட்சிக்கு வந்தோம். அதில் ரொம்ப டேஞ்சர் இருக்கு. முதல்வர் ஸ்டாலினிடம் பார்த்து என்று சொல்வேன். எங்க குழி வெட்டுவான் என்றே தெரியாது. ஆனால் இந்த கட்சியை, ஆட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்துகிற பேராற்றல் கலைஞரை ஒரு படி மேலே ஸ்டாலினுக்கு இருக்கிறது என்று எனது 60 ஆண்டுகால அனுபவத்தில் நான் சொல்வேன்.
இனிமே தளபதி ஸ்டாலினை புகழ்ந்து எனக்கு என்ன ஆக போகிறது. எனக்கு ஒரே ஒரு ஆசைதான். நான் வளர்த்த கட்சி நிக்கணும். நிர்வாகத்தில் ராஜதந்திரத்தை கையாள்கிறார் ஸ்டாலின்.
பல முறை டெல்லிக்கு சென்றுதான் கலைஞருக்கு டெல்லி கைக்கு வந்தது. ஆனால் ஸ்டாலின் பலமுறை எல்லாம் செல்லவில்லை. 4 ஆண்டுகளுக்குள்ளே டெல்லி கைக்கு வந்துள்ளது.
இன்னும் 25 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டை பற்றி கவலை இல்லை. நான் இருக்கிறேனோ இல்லையோ என் கட்சி இருக்கும்” எனத் தெரிவித்தார்.