1. Home
  2. தமிழ்நாடு

விண்ணை முட்டும் வெங்காயம் விலை! மக்கள் அதிர்ச்சி!!

விண்ணை முட்டும் வெங்காயம் விலை! மக்கள் அதிர்ச்சி!!


அண்டை மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை கோயம்பேட்டிற்கு வெங்காய வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வழக்கத்தை விட கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, வெங்காய வரத்து தற்போது வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதேபோல சின்ன வெங்காயத்தின் விலை 100 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வரத்து குறைவால் இனி வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் உயரும் என வியபாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போல, மற்ற காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like