1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்த எஸ்.ஜே சூர்யா..!

Q

முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் எஸ்.ஜே சூர்யா. குறிப்பாக பல நட்சத்திர ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.. இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.
சமீபத்தில் வீர தீர சூரன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் எஸ் ஜே சூர்யா பல நேர்காணலில் தன்னிடம் கில்லர் என்ற ஒரு கதை இருக்கிறது அது அவரது கனவு ப்ராஜக்ட் எனவும் அதை கண்டிப்பாக இயக்குவேன் என கூறி வந்தார். இந்நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்
இப்படத்தின் கதாநாயகனாகவும் எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார். இதுக்குறித்து எஸ்ஜே சூர்யா பேசுகையில் " இது என்னுடைய கனவு ப்ராஜெக்ட். உங்களுடைய ஆசிர்வாதம் என்றும் எனக்கு வேண்டும். இப்படத்தின் கதையை நான் பல ஆண்டுகளாக எழுதி வருகிறேன். இது ஒரு பான் இந்தியன் திரைப்படமாக இருக்கும்" என கூறியுள்ளார்.
இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
வாலி, குஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, கடைசியாக கடந்த 2015ம் ஆண்டு 'இசை' படத்தை இயக்கி நடித்திருந்தார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனராவது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கில்லர் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில், கில்லர் படத்தின் இசையமைப்பாளர் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் என அறிவித்துள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like