1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பெண் உயிரிழப்பு..!

Q

மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான சத்யபிரபு பட்டாசு ஆலை விருதுநகர் அருகே கோவில் புலி குத்தியில் இயங்கி வருகிறது.

 

இந்நிலையில், இன்று (பிப்.5) மதியம் ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பயங்கர சத்தத்துடன் தொழிலாளர்கள் பணியாற்றிய அறைகள் வெடித்துச் சிதறின. ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து உடனே அருகில் இருந்தவர்கள் வச்சக்காரப்பட்டி காவல் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விருதுநகர், சாத்தூர், சிவகாசி ஆகிய ஊர்களிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் பட்டாசு ஆலைக்கு விரைந்தன. ஆனால், ஆலையில் பட்டாசு தொடர்ந்து வெடித்து கொண்டிருந்ததால் சுமார் அரை மணி நேர காத்திருப்புக்கு பின்பு ஆலைக்குள் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு 1 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். அதில் 2 பேர் பலத்த தீக்காயத்துடனும், 3 பேர் லேசான தீக்காயத்துடனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என்று தீயணைப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு பெண் தொழிலாளியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஏற்கனவே 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

10க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலுமாக தரைமட்டமான காரணத்தினால் இடிபாடுகளில் சிக்கி வேறு யாரேனும் உயிரிழந்திருக்கிறார்களா என்பது குறித்து இடிபாடுகளை அகற்றியபோது தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like