பிரபல கோவிலில் மத யாத்திரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி..!
கோவாவில் ஸ்ரீ தேவி லாராய் ஜாத்ரா கோவிலில் மத யாத்திரை நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்திருந்தனர். சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், ஆளில்லா விமானம் (drone) மூலம் கூட்டத்தை கண்காணிக்கும் பணியும் நடைபெற்றது. நேற்று லாராய் தேவி கோவிலில் பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் நிலைமையை ஆய்வு செய்து வருகிறார். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். இறந்தவர்களில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்திருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.