ஏற்காடு சென்ற தனியார் பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது - 6 பேர் பலி..!

ஏற்காட்டுக்கு சென்றுவிட்டு 30-க்கும் மேற்பட்ட பயணிகள் தனியார் பேருந்து ஒன்றில் சேலத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மலைப்பாதையின் 11-வது கொண்டை ஊசியில் பஸ் திரும்பும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அப்படியே மலைப்பள்ளத்தாக்கில் விழுந்தது. 50 அடி பள்ளத்திற்குள் பஸ் விழுந்ததில் பயணிகள் அனைவரும் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீஸார், தீயணைப்புப் படையினருடன் வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.