1. Home
  2. தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி !

1

 சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில்  தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென  ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த 7 அறைகளும் இடிந்து தரைமட்டமாகின. வானுயர எழுந்த தீயால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில், பட்டாசு ஆலை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார்  கைது செய்யப்பட்டுள்ளார்.

அலட்சியமாக செயல்பட்டதால் இந்த திடீர் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் பல  பிரிவுகளில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணனை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே ஆலையின் மேலாளர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது குத்தகைதாரர் முத்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.  இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் சார்பில் தலா ரூ.5லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது  

Trending News

Latest News

You May Like