சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : வானதி ஸ்ரீனிவாசன் இரங்கல்..!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி, ரெங்கபாளையத்தில் இயங்கி வரும் கனேஷ்கர் பட்டாசு ஆலையில், திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயன மூலப்பொருட்கள் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டதால் 14 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து பாஜக எம்.எல்.ஏ திருமதி வானதி ஸ்ரீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.