சிவகார்த்திகேயன் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை..!
ஆர்.ரவிக்குமார் இயக்க கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் அயலான்.
ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், இஷா கோபிகர், பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சயின்ஸ் பிக்ஷன் மற்றும் பேண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ஏலியன் ஒன்றை மையமாக வைத்து தயாராகியுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் அயலான் படத்தின் முதல் காட்சியை காண சென்னை வெற்றி திரையரங்கிற்கு சிவகார்த்திகேயன் வருகை தந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
சயின்ஸ் ஃபிக்ஷனும் ஃபேண்டஸியும் கலந்த ஜானரில் இந்த படம் உருவாகி இருக்கிறது. நம்ம ஊரில் இது போன்ற படங்களை எடுப்பது மிகவும் குறைவு. அதை முயற்சி செய்திருக்கிறோம் என்பது மிகவும் சந்தோஷம். இதுக்கு அப்புறம் நீங்க எல்லாரும் பார்த்து தான் சொல்ல வேண்டும். நிச்சயமாக இந்த படம் திருப்தியாக இருக்கும். அதிக எண்ணிக்கையிலான கம்ப்யூட்டர் கிராபிக்ஸில், நமக்கு கொடுக்கப்படுகின்ற பட்ஜெட்டில் சரியாக நிகழ்த்தி காட்ட வேண்டும் என்பதுதான் மொத்த பட குழுவினரின் உழைப்பு. எல்லோருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். அயலான் படத்திற்கு நம்பி வாங்க சந்தோஷமா போங்க போயிட்டு ரிப்பீட்ல வாங்க” என்று நகைச்சுவையாக பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.