1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு..!

Q

சுதா கொங்கரா இயக்கத்தில் 25-வது படமான 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்கே 23' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று பிப்ரவரி 17-ந் தேதி காலை 11 மணிக்கு இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது. 

. 'மதராஸி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது

Trending News

Latest News

You May Like