வெளியான சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் டீஸர்..! இதையெல்லாம் கவனிச்சீங்களா?

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில், சிவகார்த்திகேயன் நாயகனாகவும், ரவி மோகன் வில்லனாகவும் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படத்தின் நாயகியாக ஸ்ரீலீலா மற்றும் ஒரு முக்கிய கேரக்டரில் அதர்வா நடித்து வரும் நிலையில், இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இது அவருடைய நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.இந்த படத்திற்கு "பராசக்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த கதை, 1960களில் நடப்பது போல காட்சி படுத்தப்பட்டிருக்கலாம். இதில் இடம் பெற்றிருக்கும் கட்டடங்களை பார்க்கையில் அவை பழைய காலத்திற்குறியவை போலத்தான் தெரிகிறது.சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா உள்பட அனைவரது தோற்றமும் கூட பழைய காலத்தில் இருப்பது போலவே உள்ளது. எனவே, 1960களில் நடந்த இந்தி திணிப்பிற்கு எதிராக நடந்த போராட்ட கதையாக இருக்கலாம்.
இந்த டைட்டில் டீசரில், சிவகார்த்திகேயன் சொடக்கு போட்டுக்கொண்டே வருவது போல ஒரு பக்கம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம், ரவி மோகன் துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இவர்களுக்கு இடையில் அதர்வா, ஹீரோவுக்கு ஆதரவாக நிற்கும் கதாப்பாத்திரமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. தற்போதைய காட்சிகளை வைத்து பார்க்கையில் சிவகார்த்திகேயனுக்கு இந்த படத்தில் ஜோடி இல்லை என்பது போல ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர்.