சிவகார்த்திகேயன் வீட்டில் விரைவில் குவா குவா சத்தம்... மகிழ்ச்சியில் குடும்பத்தினர்..!

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் காமெடி ஷோக்களில் இணைந்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர். விஜய் டிவியின் ஆங்கராக தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கி, தன்னிடம் இருக்கும் மிமிக்ரி மற்றும் காமெடி திறமையால் மிகப்பெரிய உயரங்களை அவர் அடைந்துள்ளார். தனுஷின் 3 படத்தில் காமெடியனாக நடித்தபோது யார் இவர் என்று அனைத்து ரசிகர்களையும் கேட்க வைத்தவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து காமெடி கலாட்டா செய்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன்னுடைய லெவலே வேற என்னும்படியாக அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார்.
தன்னை சிறப்பான காமெடி ஹீரோவாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக வெளிப்படுத்தினார். இந்தப் படங்களின் அதிரி புதிரி வெற்றி அவருக்கு அடுத்தடுத்த கட்ட நகர்வுகளுக்கு காரணமாக அமைந்தன. தொடர்ந்து ஹன்சிகா, நயன்தாரா என முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்தார்.
அடுத்தடுத்து டாக்டர் மற்றும் டான் போன்ற படங்களின்மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். இந்தப் படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்து மாஸ் காட்டியுள்ளன.
தற்போது அமரன் பதில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் குடும்ப உறவினரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அந்த வீடியோவில் ஆர்த்தி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இன்னும் சில மாதங்களில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும் , குகன் என்ற மகனும் உள்ளனர்.
சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் குழந்தை சத்தம் கேட்க இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அவரது ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடியும் , சிவகார்த்திகேயனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர்.
Recent video of our #Prince @Siva_Kartikeyan anna , #AarthiSK Anni & little angel #AaradhanaSK on a birthday function🤩🎉
— SK THANGACHI (@jannathulrahmat) May 30, 2024
Extremely happy to see our lovely #AarthiSK Anni pregnant 🥳😇
Very much excited to welcome 3rd little one👶🏻❤🧿#PrinceSK #GuganDossSK pic.twitter.com/FUf11Ki8EP