1. Home
  2. தமிழ்நாடு

உதவி இயக்குநர்களுக்கு விலையுயர்ந்த பரிசளித்த சிவகார்த்திகேயன்..!

Q

அயலான் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்திற்கு அமரன் என்று தலைப்பு வைத்து அண்மையில் டைட்டிள் டீசரையும் படக்குழு வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் அமரன் படத்தை தடை செய்யக் கோரியும், டீசரையும் நீக்கக்கோரியும் போர்க்கொடி தூக்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்தனின் கதையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவு பெற்றது. இதையொட்டி, படக்குழுவுக்கு சிவகார்த்திகேயன் விருந்தளித்தார். மேலும், உதவி இயக்குநர்களுக்கு விலை உயர்ந்த ஃபாசில் கைக்கடிகாரத்தை சிவகார்த்திகேயன் பரிசளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Trending News

Latest News

You May Like