1. Home
  2. தமிழ்நாடு

ஷோபனா இறப்புக்கு விளக்கம் கொடுத்த சகோதரி..!

1

பிரபல காமெடி நடிகையாக இருந்தவர் ஷோபனா, பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வந்துள்ளார். குறிப்பாக ஷோபனாவும் வடிவேலும் இணைந்து செய்யும் காமெடியினைப் பார்வையிடும் ரசிகர்கள் ஏராளம். அவ்வாறு பலரது மனதையும்  கவர்ந்த  காமெடி நடிகை சோபனா.

அத்தகைய சிறந்த நடிகை திடீரென உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் உள்ளாக்கியது. அவருடைய திடீர் மரணத்திற்கு பல காரணங்களும் கூறப்பட்டன.  

இந்நிலையில், ஷோபனாவின் சகோதரி ஒருவர் அளித்த பேட்டி ஒன்றில் சோபனா பற்றி மிகவும் வருத்தமாக கதைத்துள்ளார். தற்போது அவருடைய பேட்டி வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறும்போது,  ஷோபனா இறந்த போது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. அதை விட வடிவேல் சார் உடன் அவளை சேர்த்து வைத்து கதைத்தது மிகவும் வருத்தமாக இருந்தது. 

ஒரு ஆட்டிஸ்ட் என்றா இப்படி தான் எழுதுவாங்களா? ரொம்ப கேவலமா இருந்துச்சு. வீட்டை விட்டு வெளியே போக முடியல. ஆனாலும் எனது அம்மா எனக்கு ஆறுதல் கூறினார். இப்படி தான் எழுதுவாங்க.. அதைப் பற்றியெல்லம் ஜோசிக்காதே என தைரியம் அளித்தார்.

ஆனாலும் அவர்களுக்கும் குடும்பம் இருக்கும் தானே.. அவங்க வாழ்க்கையில் பிரச்சினை இருக்காதா? நோய் நொடி இருக்காதா? எதற்காக இப்படி எல்லாம் எழுதுறாங்க.. நிஜத்தில் அக்காவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் அவர் அந்த தப்பான முடிவு எடுத்து விட்டார் என மிகவும் மன வேதனையில் பேசியுள்ளார்  சோபனாவின் சகோதரி.

மேலும் சினிமா செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்

Trending News

Latest News

You May Like