அக்கா, தங்கைக்கு குழந்தை திருமணம்.. பெற்றோர் நடவடிக்கையால் அதிகாரிகள் அதிர்ச்சி !!

வேலூர் மாவட்டம் அருகே மேல்பட்டியில் 17 வயது சிறுமி ஒருவருக்கு திருமணம் நடத்த பெற்றோர் தயாராகி வந்தனர். பின்னர் திருமணம் நடக்கும் நாளில் குழந்தை திருமணம் நடப்பதாக மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பிரியங்கா தலைமையில் சமூக நலத்துறையினர் மேல்பட்டி போலீசாருடன் அங்கு சென்று விசாரித்தனர்.
அப்போது அங்கு ஏற்கனவே கடந்தவாரம் திருமணம் முடிந்தது தெரியவந்தது. மேலும் திருமணம் செய்துக்கொண்ட இருவருக்கும் அதாவது, மணமகளுக்கு 19 வயதும், மணமகளுக்கு 17 வயதும் ஆனது தெரியவந்தது. அவர் பிளஸ்2 முடித்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதற்கு முன்பு 2 வாரங்களுக்கு முன்பு அந்த மாணவியின் 16 வயதுடைய தங்கைக்கும் குழந்தை திருமணம் நடத்தியிருப்பது தெரியவந்தது. அக்கா, தங்கை 2 பேரையும் மீட்ட சமூகநலத்துறையினர் குழந்தைகள் நலக்காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து மேல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிகள் திருமணத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வரும் நிலையில் இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் கூறுகின்றனர்.
ஒரே வீட்டில் அக்கா, தங்கை 2 பேருக்கும் குழந்தை திருமணம் நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in