'சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தான் டோய்' புகழ் நடிகை இப்போ எப்படி இருக்கார் பாருங்க!

கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இடம்பெற்ற சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். அந்த பாடலுக்கு நடனமாடிய ரகசியா அதைவிட பிரபலமானார்.
பல அயிட்டம் பாடல்களுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்த ரகசியா, வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2009ஆம் ஆண்டு வெளியான மூணார் எனும் படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்ட இவர் மும்பையில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் ரகசியாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 16 வருடங்கள் ஆகிவிட்டாலும் கூட அவர் அப்படியே இருக்கிறார் என்று நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.
newstm.in