1. Home
  2. தமிழ்நாடு

'ஹரிவராசனம்' விருதை பெற்றார் "கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" புகழ் பாடகர் வீரமணிதாசன்..!

1

தமிழ் பின்னணி பாடகர் பி. கே. வீரமணிதாசனின் ஆன்மிக பங்களிப்பை கவுவிக்கும் வகையில் 'ஹரிவராசனம்' விருதுக்கு கேரள அரசு அவரை தேர்வு செய்தது. இந்த விருது ஆண்டுதோறும் சபரிமலையில் வழங்கப்பட்டு வருகிறது.

சபரிமலை சன்னிதானத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், இந்த ஆண்டுக்கான 'ஹரிவராசனம்' விருதை பாடகர் வீரமணிதாசனுக்கு கேரளா தேவசம் துறை அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் வழங்கினார். மேலும், விருதுடன் ரூ.1 லட்சம் பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது.

பக்திக்குப் பெயர் பெற்ற வீரமணிதாசன், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்மிகப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இவர் பாடிய கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, சபரி மலை ஜோதிமலை, எல்லாம் வல்ல தாயே, எங்க கருப்பசாமி போன்ற பாடல்கள் தற்போது வரை கோயில் திருவிழாக்களில் தவிர்க்க முடியாத இடங்களை பிடித்துள்ளன.

Trending News

Latest News

You May Like