பாடகி சுசித்ரா சரமாரி புகார்..! கையில் பாட்டிலோடு கதவை தட்டிய விஷால்..!
பாடகி சுசித்ரா ஏற்கனவே பல திரைபிரபலங்கள் மீது சரமாரி புகார்களை வைத்தவர். நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் என்று பலரை பற்றிக் கடுமையாகப் பேசி உள்ளார்.
நடிகைகள் திரிஷா பற்றியும் கூடக் கடும் புகார்களை வைத்துள்ளார். தனது முன்னாள் கணவர் கார்த்திக்கை ஒருபாலினத்தவர் என்றும் புகார் வைத்துள்ளார். சுசித்ரா பேசி இருக்கிறார். இப்போது அதே சுசித்ரா நடிகர் விஷால் மீது கடுமையான புகார்களை வைத்துள்ளார்.
விஷால் நடுக்கம்:
சமீபத்தில் மதகஜராஜா பட ப்ரோமோஷன் விழாவில் விஷால் கலந்து கொண்டார். மிக அதிக பவர் கொண்ட கண்ணாடி அணிந்தபடி வந்தார். முடி எல்லாம் வெட்டி மிக மோசமான தோற்றத்தில் இருந்தார். அவரால் நிற்கக் கூட முடியவில்லை. அவர் மைக் பிடித்தபோது கூடக் கைகள் நடுங்கியது.
அதோடு அவர் கால்கள் நடுங்கியதால் டிடி அவரை அமர்ந்து பேசும்படி கூறினார். ஒரு காலத்தில் கட்டுமஸ்தாக இருந்த விஷால் இப்படி ஆனது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. அட விஷாலா இப்படி என்று நெட்டிசன்கள் கேட்கும் அளவிற்கு மோசமாக இருந்தது.
இது வைரல் பீவர் என்று சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் சிலர் அது காய்ச்சல் அல்ல வேறு எதோ அவருக்கு நடந்துள்ளது என்று விமர்சனங்கள் வைத்தனர். அவர் போதை பொருட்களுக்கு அடிமையாகிவிட்டோரோ என்றும் வாதங்கள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில்தான் நடிகர் விஷால் மீது பாடகி சுசித்ரா சரமாரி புகார்களை வைத்துள்ளார். இது தொடர்பாகச் சுசித்ரா வெளியிட்ட வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது.
அதில், விஷாலின் நடுக்கத்திற்கு போதை பொருட்களே காரணம். அவரைப் பார்த்து ரசிகர்கள் வேண்டுமானால் கலங்கி போகலாம். இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தம் அடையலாம். ஆனால் நான் கவலைப்பட மாட்டேன்.
அவருக்கு இது தேவைதான். நன்றாக அனுபவிக்கட்டும். என் வீட்டிற்கு கணவன் இல்லாத நேரத்தில் இவர் வந்திருக்கிறார். நன்றாகக் குடித்துவிட்டு. போதையை போட்டுவிட்டு கண்கள் எல்லாம் மஞ்சளாக என் வீட்டிற்கு வைன் பாட்டிலோடு வந்திருக்கிறார்.
என் வீட்டு கதவைத் தட்டியவர்… என் கணவர் இல்லை என்று சொன்ன பின்பும் கூட விடாமல் உள்ளே வர முயன்று இருக்கிறார்.
இவர் எல்லாம் என்ன ஜென்மம்… நான் திட்டி அசிங்கப்படுத்தி அனுப்பிய பின்பே அவர் அங்கிருந்து சென்றார். அவரைப் பற்றி நீங்கள் வேண்டுமானால் வருத்தம் அடையலாம். ஆனால் நான் கவலைப்பட மாட்டேன்.
அவருக்கு இது தேவைதான். அவர் இத்தனை காலம் செய்த விஷயங்களுக்கு இப்போது அனுபவிக்கிறார். நன்றாக அனுபவிக்கட்டும்., என்று சுசித்ரா குறிப்பிட்டு உள்ளார்.
விஷால் மீது பாடகி சுசித்ரா சரமாரி புகார்களை வைத்துள்ளார். சுசித்ரா வெளியிட்ட அந்தக் குறிப்பிட்ட வீடியோ இன்ஸ்ட்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது.