‘ஜெயிலர்’ ரஜினி ஸ்டைலில் தீபாவளி வாழ்த்து தெரிவித்து சிங்கப்பூர் போலீஸ்..!

பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சிங்கப்பூர் காவல் துறை ஒரு ஸ்பெஷலான முறையில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் பட பாணியில் சிங்கப்பூர் போலீஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் பின்னணி இசையுடன் சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில், ரஜினியின் ஹுக்கும் வசனமும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தமிழ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Happy Diwali to all #Singapore police force shares their #Diwali wishes . Pure goosebumps
— homo sapins (@ikamalkanth) October 30, 2024
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥#Rajinikanth | #Rajinikanth𓃵 | #Superstar @Rajinikanth | #Vettaiyan | #Coolie | #Jailer | #Police | #Jailer2 pic.twitter.com/0y1OVxmY9S