ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.52,520-க்கு விற்பனை..!
கடந்த சில நாட்களாக குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து விற்பனையாகிறது. இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. கடந்த சில தினங்களாக குறைந்து விற்பனையான தங்கம் விலை, இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்த மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் உயர்ந்து, ரூ.6,565-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ரூ.52,520-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,370-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் உயர்ந்து, ரூ.5,378-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 88,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து, ரூ.89,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.89.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.