1. Home
  2. தமிழ்நாடு

வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த வெள்ளி...! 1 லட்சத்தை தாண்டிய வெள்ளியின் விலை..!

1

தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத உச்சங்களை தொட்டு வருகிறது.அட்சய திருதியை தினத்தன்று ஒரே நாளில் தங்கம் விலை 3 முறை உயர்ந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஒரு பவுன் ரூ.1,240 அதிகரித்து ரூ.54,160-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.90,000-ஆக இருந்தது.

இந்த நிலையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 6,850 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 54 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 50 ரூபாய் உயர்ந்து 6,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 400 ரூபாய் உயர்ந்து 55,200 ஆக அதிகரித்துள்ளது. 

இதேபோல் வெள்ளியின் விலையும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்று 96 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரே நாளில் வெள்ளியின் விலை கிராமுக்கு 3 ரூபாய் 60 பைசா உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி 100.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சம்  100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை வரலாற்றில் முதல்முறையாக கிராம் ஒன்றுக்கு நூறு ரூபாய் என உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 01 ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளி விலை 81,600 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது 

Trending News

Latest News

You May Like