1. Home
  2. தமிழ்நாடு

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது! இவர் தான் இயக்குநர்!

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது! இவர் தான் இயக்குநர்!


1980 மற்றும் 90கள் வரை தென்னிந்திய திரைப்பட உலகில் திரைப்பட இயக்குனர்களாலும் தயாரிப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா.
அவருக்கு முன்னாலும், பின்னாலும் பல கவர்ச்சி நடிகைகள் வந்தாலும் தன்னுடைய கவர்ச்சிகரமான மயக்கும் விழிகளாலும், வாளிப்பான உடல் கட்டினாலும் மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கட்டிப் போட்டவர் சில்க் ஸ்மிதா ஒருவரே என்றால் அது மிகையில்லை.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த சவால்களும், போராட்டங்களும் மிக அதிகம். கேட்டாலே கண்கள் கலங்கும் சோகங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை "அவள் அப்படித்தான்" என்ற பெயரிலே காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும், முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தின் இயக்குநர் "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தை இயக்கிய மணிகண்டன். "சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படும் அவருடைய காந்தக் கண்களை போன்ற அழகான கண்கள் உடைய அழகான பெண்ணை இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க தேடிக் கொண்டிருக்கிறோம்" என இயக்குனர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில்க்கின் வரலாறு ஹிந்தியில் 2011ல் தி டர்ட்டி பிச்சர் என்ற பெயரில்வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like