1. Home
  2. தமிழ்நாடு

“சோஷியல் மீடியாவை மூடிவிட்டு சோஷியல் சயின்ஸ் படி” : கலெக்டர் அட்வைஸ்!!

“சோஷியல் மீடியாவை மூடிவிட்டு சோஷியல் சயின்ஸ் படி” : கலெக்டர் அட்வைஸ்!!


விடுமுறை அறிவித்ததற்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்த மாணவர்களுக்கு, சோஷியல் மீடியாவை மூடிவிட்டு சோஷியல் சைன்ஸ் புத்தகத்தை படியுங்கள் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர். பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், மாணவர்கள் மற்றும் நெட்டிசன்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார். ஆந்திர மாநிலம் கடப்பாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் மாணவர்களை தம்பி என்று அழைப்பார்.

கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஞாயிறு அன்று அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு ட்விட்டரில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் நன்றி தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், தம்பிகளா சோசியல் மீடியாவை, மூடிவிட்டு சோசியல் சைன்ஸ் புத்தகத்தை எடுத்து படியுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.


அதற்கு மாணவர்கள் ஓகே சார் படித்து விடுகிறோம் என்றும், பார்ப்போம் தலைவரே என்றும் பதிலளித்தனர். இதில் தல தினேஷ் என்பவர் வலிமை அப்டேட் சொல்லுங்கள் சார் என்று கேட்ட சுவாரஸ்யமும் அரங்கேறியது. ஆனாலும் தாம் ஒரு ..எஸ். அதிகாரி என்ற கர்வம் இல்லாமல் அவர் நெட்டிசன்களுக்கு பதில் அளித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் எளிதில் அணுகக்கூடிய வகையில் இருக்கிறார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி. இதனால் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like