தமிழகத்தில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட கடைகளுக்கு வாடகை செலுத்த வேண்டுமா ? உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் 2020 ஆம் ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும், 2021 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களிலும் கடைகள் மொத்தமாக அடைக்கப்பட்டன. இதனால், வியாபாரம் எதுவும் நடத்தப்படாத நிலையில் நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என வியாபாரி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை, விசாரித்த உயர்நீதிமன்றம் கடைகளுக்கான வாடகை, குத்தகையை தள்ளுபடி செய்ய வேண்டுமென கடந்த 2021 ஆம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாமல் கடைகளுக்கான வாடகை, குத்தகையை தள்ளுபடி செய்யவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இதன் பின்னர், மாநகராட்சி, நகராட்சி போன்ற நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகளுக்கான வாடகை மற்றும் குத்தகை தொகையான ரூ.44, 34,828 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வியாபாரி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.