1. Home
  2. தமிழ்நாடு

இந்த சாக்கடையை இன்றைய இளைஞர்கள் சகித்துக்கொள்ள வேண்டுமா?பொன்முடி பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

Q

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட கண்டன அறிக்கை:
இது தான் தி.மு.க.,வின் அரசியல் நிலை. பொன்முடி ஒரு காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர். இப்போது வனம் மற்றும் காதித்துறை அமைச்சர். இந்த சாக்கடையை இன்றைய இளைஞர்கள் சகித்துக்கொள்ள வேண்டுமா?
இந்த அமைச்சர் மட்டுமில்லை, ஒட்டுமொத்த தி.மு.க.,வும் வக்கிரமான, அசிங்கமான, அருவருக்கத்தக்கதை பேசக்கூடியவர்களே. இத்தகைய இழிசொல் பேசும் கூட்டத்துக்கு தலைமை வகிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தலை குனிய வேண்டும்.
பொன்முடியை கட்சிப்பதவியில் இருந்து நீக்குவதன் மூலம் இதை கடந்து விடலாம் என்று நீங்கள் நினைத்தால் தவறு செய்வதாகவே அர்த்தம். ஹிந்து தர்மம் (சைவம், வைணவம்) மீது தி.மு.க., நடத்தும் இடைவிடாத தாக்குதலுக்கு பதிலடி கிடைத்தே தீரும். எங்கள் அமைதியை பலவீனம் என்று எண்ணிக்கொள்ள தேவையில்லை. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like