1. Home
  2. தமிழ்நாடு

ஒரு வீட்டின் போர் மற்றும் கீழ்நிலை தண்ணீர் தொட்டி வடகிழக்கு மூலைதான் இருக்க வேண்டுமா?

1

வடமேற்கு மூலையில் செப்டிக் டேங்க் வைக்கும் போது ஏன் தண்ணீர் தொட்டி வைத்தால் என்ன பாதிப்பா?

ஒரு வீட்டின் போர் மற்றும் கீழ்நிலை தண்ணீர் தொட்டி ஏன் வடகிழக்கு மூலைதான் இருக்க வேண்டுமா? மற்ற மூலைகளில் இருக்க கூடாதா?

நமது முன்னோர்கள் வடகிழக்கு மூலையை பஞ்ச பூத தத்துவதில் நீர் தத்துவமாக வைத்தனர்...

நமது பூமி வடகிழக்கு சாய்ந்த வாறு தன்னைதானே சுற்றி கொண்டு சூரியனை வலம் வந்த வண்ணம் உள்ளது ...

நீர் என்பது பள்ளமான பகுதியை நோக்கி நகரும் தன்மை கொண்டது ....

இதில் பூமியின் பெரும்பாலான நதிகள் மேற்கில் இருந்து கிழக்காவும் , வடகிழக்காவும் ஓடுகிறது....

ஆதலால் வடகிழக்கு பகுதி குளிர்ச்சியான பகுதியாக இருக்கும்....அதேப்போல் சூரியனின் உத்ராயண மற்றும் தட்சாயன நகர்வில் அதிக வெப்ப தாக்குதலால் பாதிக்கப்படாத பகுதியும் வடகிழக்கு பகுதிதான் ..ஏன்னெனில்

சூரிய உதயத்தின் போது ஏற்படும் வெப்பம் என்பது குறைவான வெப்பமாக இருப்பதால் வடகிழக்கு பகுதிகள் முழுவது அதிக வெப்பம் இருக்காது ...ஒரு வருடத்தில் வடகிழக்கு பருவகாற்று குறைந்தது 4மாதங்கள் இருப்பதால் இன்னும் வடகிழக்கு பகுதி குளிர்விக்கப்பட்டு இருக்கும்...

சூரியன் உதயமாகி உச்சம் வரும் போது வடகிழக்கு பகுதியிலும் சூடான வெப்ப தாக்குதல் இருந்தாலும் அச்சமயத்தில் வடகிழக்கு பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அல்லது கிணறு இருக்கும் பட்சத்தில் அதில் உள்ள நீராணது வெப்பத்தை ஈர்த்து வெப்பத்தை குறைத்து எப்போதும் வடகிழக்கு பகுதியை இன்னும் குளிர்ச்சியான பகுதியாகவே வைத்து கொள்ளும் .....எனவே வருடத்தில் பெரும் பகுதி காலங்கள் குளிர்ச்சியான நிலையிலேயே வடகிழக்கு பகுதி இருக்கும்....

எந்த திரவ பொருளும் வெப்பத்தை ஈர்த்து பொறுமையாக அந்த வெப்பத்தை வெளியிடும்....

எந்த ஒரு திடப்பொருளும் வெப்பத்தை ஈர்த்து விரைவில் வெளியிடும்...

இதனால்தான் வடகிழக்கு பகுதியில் படிகட்டுகள் இருந்தாலோ அல்லது தனிப்பட்ட கட்டிடடங்கள் இருந்தாலோ அல்லது திறப்பு இல்லாமல் இருந்தாலோ அந்த கட்டுமானம் வெப்பத்தை ஈர்த்து விரைவில் வெளியிடும் இதனால் பகல் பொழுதிலும் வடகிழக்கு பகுதி வெப்பமாக இருக்கும் என்பதால் அந்த பகுதியில் கட்டுமானங்களை தவிர்த்து காலியிடங்கள் விட்டு கீழ் நிலை தண்ணீர் தொட்டி அமைத்து கொள்வது சிறப்பு ....

வடமேற்கில் செப்டிக் டேங்க் அமைக்கும் போது ஏன் தண்ணீர் தொட்டி அமைக்க கூடாதா என்றால் ...செப்டிக் டேங்க் அமைக்க ஏதுவான பகுதி வடமேற்கு மூலைதான். செப்டீக்டேங்கில் இருந்து வரும் கெட்ட வாயுக்களை காற்று மண்டல பகுதியான வடமேற்கு காற்றானது சிதறடித்து விடுவதால் அந்த பகுதிதான் செப்டிக் டேங்க் அமைக்க ஏதுவான பகுதி என்கிறோம்..மற்ற மூலைகளில் அமைக்கும் போது அது பாதிப்பை தரும்...

தென்கிழக்கு மூலையில் தண்ணீர்தொட்டி அமைக்கும் போது ஏற்கனவே வருடத்தின் பெரும்பகுதி காலம் அபரிதமான வெப்பதாக்குல் உள்ள பகுதி என்பதால் விரைவில் நீர் ஆவியாகும் சூழலும்....அந்த பகுதியில் அமைக்கும் ஆழ்துளை கிணறும் விரைவில் வரண்டு விடுகிறது இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலையும் ஏற்படும்...மேலும் வெப்பம் தேவைபடும் பகுதியில் நீர் இருக்கும் போது நமக்கு தேவையான வெப்பம் கிடைக்காமல் போவதற்கான சாத்திய கூறுகளும் உண்டு...

மேற்கண்ட விஞ்ஞான கோட்பாடுகள் 75% உண்மையானது ...

நமது அறிவியல் உலகம் எதையும் 100% சரியானதாக இருந்தால் மட்டுமே அதனை ஆதரிக்கும்..

வாஸ்து அறிவியல் ரீதியானது என்று நவீன காலத்தில் எந்த அறிவியாளரும் நிருப்பிக்கவில்லை.....பல புள்ளி விவரங்கள் அடிப்படையில் நாம் அதனை ஏற்றுகொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்..

Trending News

Latest News

You May Like