1. Home
  2. தமிழ்நாடு

பூர்வீக சொத்தை குடும்ப உறுப்பினர்களுக்கு பத்திரம் எழுதணுமா?

1

பூர்வீக சொத்தை பிரித்து எழுதி வைப்பதே பாகப்பிரிவினை.. அதாவது அப்பா வழி சொத்தில், வாரிசுகளுக்கு கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை.. இது குடும்பத்துக்குள்ளேயே செய்து கொள்ளும் சொத்து உடன்படிக்கை பத்திரமாகும். சுருக்கமாக சொல்லப்போனால், சுயமாக சம்பாதித்த சொத்தினை உறுப்பினர்களுக்கு பிரித்து எழுதுவதாகும்.

ஒரு சொத்தை இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ, அதற்கு மேல் எவ்வளவு விருப்பமோ, அந்த அளவுக்கு பிரித்து, உரிமை மாற்றம் செய்யலாம்.. குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் இது நடக்கும்..சொத்துக்களை சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக பிரிக்க வேண்டும்.. ஒருவேளை பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாக பிரிக்கப்படாதபட்சத்தில் அல்லது வாரிசுகளில் ஒருவருக்கு மட்டும் பாகம் கிடைக்காதபட்சத்தில் அல்லது அவர்களில் யாருக்காவது ஒருத்தருக்கு ஆட்சேபனை இருக்கும்பட்சத்தில், அந்த பாகப்பிரிவினையை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்லலாம்.

அதேபோல, தங்களுக்கு பாகப்பிரிவினை சொத்து வேண்டாம் என்று யாராவது சொன்னால், அவர்களிடமிருந்து விடுதலை பத்திரம் எழுதி வாங்கி கொள்ளலாம். இதனால் பல பிரச்சனைகளை பின்னாளில் தவிர்க்கலாம்.

பாகப்பிரிவினையை குடும்ப உறுப்பினர்களுக்கும், குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் எழுதி வைக்கலாம்... இதில், குடும்ப உறுப்பினர்களுக்கு, சொத்துக்களை பாகப்பிரிவினை செய்வதாக இருந்தால், முத்திரை தாள் கட்டணம் 1 சதவிகிதம் அதாவது அதிகபட்சமாக 25,000 ரூபாயும், பதிவுக்கட்டணமாக 1 சதவிகிதம் அதாவது அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.

அதாவது, அவரவர் பாகச்சொத்தின் மதிப்புக்கு 1% ஸ்டாம்ப் கட்டணமும், 1% பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.. அதிலும் சலுகையாக, ஸ்டாம்ப் கட்டணம் மிக அதிகபட்சமாக ரூ.25,000/-ம், பதிவுக் கட்டணம் மிக அதிக பட்சமாக ரூ.4,000/- செலுத்தினால் போதும் என்று, இந்திய முத்திரைச் சட்டத்தில் (தமிழ்நாடு திருத்தல் சட்டத்தில்) சொல்லப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு தரும் சொத்து என்றால், முத்திரைத்தீர்வு கட்டணம் 4 சதவீதம் (சந்தை மதிப்பு) மற்றும் பதிவுக்கட்டணம் 1 சதவீதமும் கட்ட வேண்டுமாம். அதுமட்டுமல்ல, பாகப்பிரிவினை செய்யும்போது சம்பந்தப்பட்டவர்கள் சார்ந்த மத ரீதியான சட்டம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு பாகப்பிரிவினையை செய்துக்கொள்ள சட்டம் தக்கவழிவகைகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like