தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு வேணுமா..? வேண்டாமா..? பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்..!

2018 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள பேருந்துகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது டீசல் விலை ரூபாய் 63க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்பொழுது விலைவாசி உயர்வுக் காரணமாக டீசல் விலை உயர்த்தபட்டு ரூ.92க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமது அண்டைமாநிலமான கேரளாவில் 1 கிலோ மீட்டருக்கு 1 ரூபாய் 10 காசுகளுக்கும், கர்நாடகாவில் 1 கிலோ மீட்டருக்கு 1 ரூபாயும், அதே போல் ஆந்திர மாநிலத்தில் 1 கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் 8 காசுகளுக்கும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நடைமுறையை தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்கும் பொருட்டு, போக்குவரத்து துறைச் செயலாளர் தலைமையில், போக்குவரத்து துறையின் கூடுதல் செயலாளர்கள், நிதித்துறைச் செயலாளர் மற்றும் போக்குவரத்து ஆணையர் உள்ளிட்டவர்களை கொண்டு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த உயர்மட்டக்குழு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அனைவரும், பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு வேண்டும் என்றும் , மேலும் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த பேருந்துகளில் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டு தமிழக அரசின் உயர் மட்டக்குழு ஆய்வு செய்து நான்கு மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, உயர்மட்ட குழு தலைவர்கள் , பேருந்துகளின் டீசல் மற்றும் உதிரி பாகங்கள் மற்றும் இயக்க செலவுகளை பொறுத்து கட்டணத்தை உயர்வு வழங்க கூடிய குறியீட்டு முறை இண்டெக்ஸ்முறையை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விலைப் பேருந்துளுக்கான கட்டண உயர்வு குறித்து கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.