1. Home
  2. தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 3 மாதமாக துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு : எடப்பாடி பழனிசாமி..!!

1

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, 

தமிழகம் முழுவதும் மூன்று மாதமாக துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேசன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. சென்ற மாதமே இதுகுறித்து நான் சுட்டிக்காட்டி இருந்த நிலையில், இதுவரை ரேசன் பொருட்கள் விநியோகத்தை சீர்செய்யத் தவறிய  தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

ரேசன் பொருட்களை முறையாக கொள்முதல் செய்து விநியோகிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது? ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேசன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான  தி.மு.க. அரசு,  மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான ரேசன் பொருட்களின் விநியோகத்தில் கவனம் செலுத்தி, அனைத்து ரேசன் பொருட்களும் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய  முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 


 

Trending News

Latest News

You May Like