1. Home
  2. தமிழ்நாடு

வேட்டையன் ஆடியோ லாஞ்சில் ”சூப்பர் ஸ்டார்” சொன்ன குட்டிக் கதை!

1

டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் புதிய படம் வேட்டையன். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் அக்டோபர் பத்தாம் தேதி ஆயுத பூஜையை குறிவைத்து இந்த படம் வெளியாகிறது.

லைகா ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமல்லாது, அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இடம் பெற்று இருந்த மனசிலாயோ பாடல் வெளியாகி ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்தது. ஓணம் பண்டிகையோடு பாடல் வெளியாக பலரும் ரீல்ஸ் போட்டு இன்ஸ்டாகிராமை திணற வைத்தனர். இந்த நிலையில் அடுத்து ஹண்டர் வர்றார் பாடலும் வெளியானது.

இந்த நிலையில் வேட்டையன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது அதை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கடந்த முறை ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற போது ரஜினி சொன்ன காக்கா கழுகு கதை பெரும் பேசு பொருளானது. அடுத்த தலைமுறை நடிகர் ஒருவரை குறிவைத்து ரஜினிகாந்த் பேசினார் எனக் கிளப்பி விட அதே கதையை அந்த இளம் நடிகரும் பேச, இரு ரசிகர்களும் மோதிக்கொண்டனர். தற்போது வரை அந்த விவகாரம் சமூக வலைதளங்களில் எதிரொலிக்கிறது.

இந்த நிலையில் தனது வழக்கமான குட்டிக் கதையை வேட்டையன் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் போதும் சொன்னார் ரஜினிகாந்த். அதில்,”புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், படத்தில் நடிச்ச மாதிரி நீங்கள் நடினும்னு ரசிகர்கள் எதிர்பாக்குறாங்க அப்டின்னு டைரக்டர் ஞானவேல் எங்கிட்ட சொன்னாங்க..

அப்போ எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வந்துச்சு.. மிகப்பெரிய பள்ளத்தாக்குல இறங்கி அங்கு ஓடும் ஆத்துல துணி துவைக்குற ஒருத்தருக்கு, அவர் துவைக்குற அந்த துணி பொதிய சுமந்துட்டு போறதுக்கு ஒரு கழுதை இருந்துச்சு.. ஒருநாள் அந்த கழுதை திடீரென்று காணாமல் போயிடுச்சு.. துணி துவைக்கிறவங்களுக்கு அந்த கழுதை ரொம்ப முக்கியம் இல்லையா.. அதனால வீட்ல இருக்குறவங்கலா கூட மறந்துட்ட அந்த டோபி கழுதையா பல இடங்களில் தேடி பார்க்கிறார். எங்கேயுமே கிடைக்கல, கடைசியா ஒரு மறாத்தடியில் உட்கார்ந்துட்டாரு.. அப்போ அங்க ஒரு மிகப்பெரிய ஞானி வந்துட்டாருன்னு மக்கள் நினைக்கிறாங்க..

அவங்க அந்த ஞானிக்கு பக்தர்களா மாறுறாங்க.. அவருக்கு பல சிஷ்யர்கள் எல்லாம் அங்க வந்து சேர்றாங்க.. ஆனால் அந்த ஞானி எதையுமே பேச மாட்டார். அவர் ஆனா அவர் சொன்னா சிக்னல் காட்டினால் நல்லர்து நடக்கும் அப்படின்னு நம்புனாங்க.. ஊரே அந்த ஞானிய வந்து புகழ்ந்து பேசினாங்க.. கடைசியா அந்த ஞானி உட்கார்ந்து இருக்க போது ஒரு கழுதை வந்து நின்னுச்சு.. அப்போ வந்து அவரை ஞானி என் கழுதை வந்துடுச்சு,, கழுதை வந்துடுச்சு,, அப்படின்னு கத்தினார். அப்பொழுது தான் தெரியுது அந்த சிஷ்யர்களுக்கு அவர் தான் துணி துவைக்கும் போது கழுதைய தொலைச்ச டோபினு. இருந்தாலும் அதைப் பத்தி நீங்க ஏதும் பேசாதீங்க.. இப்போ நீங்கள் மிகப்பெரிய ஞானி அப்டின்னு சொல்லி அவரை அமைதியாக உட்கார வைச்சுட்டாங்க.. அதுபோல்தான்... நானும். டோபி மாதிரி.. முள்ளும் மலரும் படத்தில் நான் நடித்து பேசிய வசனங்கள் எல்லாம் இயக்குநர் மகேந்திரன் பேசிய டயலாக் தான்.

ஆனா நான் நடிச்ச காட்சிகள் தான் வெளியே வந்திச்சு.. ஒரே சீனுக்கு 15 டேக் எடுத்துள்ளேன். ஒரு டோபி மாதிரி ஏதோ நடந்து போச்சு.. என்னை நல்ல ஆர்டிஸ்ட் என்று சொன்னாங்க. தளபதி மாதிரி என்னை நடிக்க சொன்னா? எப்படி, இதனால்.. தான் பைரவி. போக்கிரி ராஜா, முரட்டுக்காளை ஆகிய படங்களை பண்ணி என்னுடைய டிராக்கை மாத்திக்கிட்டேன்” என பேசினார். தன்னை டோபி என ரஜினிகாந்த் சொன்னாலும், கழுதை என யாரை சொன்னார்? என்ற விவாதம் சமூக வலைதளங்களில் கிளம்பியுள்ளது.

Trending News

Latest News

You May Like