1. Home
  2. தமிழ்நாடு

முதலமைச்சர் வேட்பாளர் மீது செருப்பு வீச்சு.. பொதுகூட்டத்தில் பதற்றம் !

முதலமைச்சர் வேட்பாளர் மீது செருப்பு வீச்சு.. பொதுகூட்டத்தில் பதற்றம் !


பீகாரில் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 2 மற்றும் 3 கட்ட தேர்தல் நவம்பர் 3 மற்றும் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. நவம்பர் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், மெகா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் பீகார் தேர்தல் இந்தியா முழுவதும் உற்றுநோக்கப்படுகிறது.

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ராஷ்டீரிய ஜனதா தள கட்சி தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் அவுரங்காபாத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். ‘

அப்போது தேஜஸ்வி யாதவி மேடைக்கு அருகே இருந்தவர்களை அமைதியாக இருக்க கூறிக்கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் மேடைக்கு முன்பிருந்த நபர் தனது இரண்டு செருப்புகளையும் தேஜஸ்வி யாதவ் நோக்கி வீசியுள்ளார்.

இதில் முதல் செருப்பு தேஜஸ்வி மீது படாமல் பின்னால் சென்றது. ஆனால் மற்றொரு செருப்பு அவரது மடியில் விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து அங்கிருந்த அக்கட்சியின் தொண்டர்கள் அந்நபரை பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


newstm.in

Trending News

Latest News

You May Like