1. Home
  2. தமிழ்நாடு

பதைபதைக்கும் வீடியோ : அசுர வேகத்தில் மோதிய கார்.. தூக்கி வீசப்பட்ட தூய்மை பணியாளர் பலி..!

1

தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்த முறையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார் சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராணி.நள்ளிரவு சேலையூர் – வேளச்சேரி சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டபோது அங்கு அதிவேகமாக வந்த கார் ராணி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராணி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலன்ளிக்காமல் உயிரிழந்தார் இந்த சம்பவம் ஆனது தொழிலாளர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது உடனடியாக இன்று காலை பணிக்கு செல்லாமல் ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உயிர் இழந்த பெண் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் இதனை தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி கமிஷ்னர் பாலச்சந்தர் தலைமையில் அதிகாரிகள் தொழிலாளர்ரிடம் பேச்சு வார்த்தை நடத்தின.

இந்த விபத்தில் பலி ஆன ராணி குடும்பத்தினருக்கு தனியார் ஒப்பந்தம் நிறுவனம் மூலமாக உரிய காப்பீடு நீதி வழங்கருத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும் தற்காலிக நிவாரணமாக அவர்களுக்கு உடனடியாக மாத செலவுகள் சரிசெய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் இறந்த ராணியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தனியார் நிறுவனம் மூலமாக அவருடைய கணவருக்கு ஓட்டுநர் வேலை வழங்கபடும்

அவருடைய மகனுக்கு கல்வி செலவு உதவிசெய்யப்படும் என்ற உறுதியை மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர் தலைமையில் நடந்தது அதன் பிறகு தொழிலாளர்கள் தற்போது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி கொண்டுருக்கிறார்கள் அதிவேகமாக அந்த கார் மோதி தொழிலாளர் பலி ஆனா சம்பவம் தாம்பரம் மாநகராட்சி துப்புரவுபணியாளர்களை பேரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது

Trending News

Latest News

You May Like