அதிர்ச்சி வீடியோ..! நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்..!
இடுக்கியில் உள்ள பேருந்து நிலையத்தில் காத்திருந்த இளைஞர் மீது பேருந்து மோதிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கட்டப்பனா பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக விஷ்ணு என்பவர் காத்திருந்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று அவர் மீது மோதியுள்ளது . ஆனால் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் லேசான காயங்களுடன் விஷ்ணு உயிர் தப்பினார்.
இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா- இடுக்கி : பேருந்திற்காக காத்திருந்த விஷ்ணு என்பவர் மீது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று மோதியது. இச்சம்பவத்தில் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்!#Kerala #idukki #Bus #Accident #SparkMedia pic.twitter.com/sdXgy52InA
— Spark Media (@SparkMedia_TN) December 2, 2024