1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி வீடியோ! நிலச்சரிவால் சரிந்து விழும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள்..!

1

இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பெய்த கனமழை காரணமாக இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

Himachal Pradesh

இந்நிலையில், சிம்லா, மண்டி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லும் காட்சி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (என்டிஆர்எப்), மாநில பேரிடர் மீட்புப் படையினர் (எஸ்டிஆர்எப்), ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் நிலச்சரிவினால் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


 


மாநிலத்தில் பருவமழை தொடங்கிய கடந்த ஜூன் 24 முதல் ஆகஸ்டு 14 வரை மொத்தம் ரூ.7,171 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. சுமார் 9,600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like