1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி வீடியோ..! பட்டத்தோடு வானில் பறந்த 3 வயது சிறுமி..!

1

தாய்வானில் பட்டம் விடும் திருவிழாவின்போது, அங்கிருந்த அனைவரும் ராட்சத பட்டம் ஒன்றை, பறக்க வைக்க முயற்சி செய்துள்ளனர்.யாரும் எதிர்பார்க்காத வகையில்  ராட்சத பட்டம் வானில் பறக்கும்போது 3 வயது சிறுமி அதன் வாலை பிடித்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து பட்டம் வானில் பறக்கும்போது, அதன் வாலை பிடித்துக் கொண்டிருந்த 3 வயது சிறுமியும், மேலே பறந்துள்ளார்.

இதைக்கண்டு அங்கிருந்த பலரும், கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், காற்றின் வேகம் சீரான பிறகு, அந்த சிறுமி மீண்டும் கீழே வந்தார்.இதையடுத்து, அந்த சிறுமியை, அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமிக்கு சிறுகாயங்கள் மட்டுமே ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விழா ஏற்பாட்டாளர்கள், குறித்த பட்டம் விடும் திருவிழாவை உடனடியாக நிறுத்தினார்கள்.3 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம், தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 

Trending News

Latest News

You May Like